Thursday, 25 October 2012

பெண்ணுரிமைவாதிகளின் இருவேறுபட்ட பார்வை

டில்லியில் பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்படுகிறாள், 7 மாதங்களில் விசாரனை முடிந்து குற்றவாளிகளுக்கு 13 வருட சிறை தண்டனை,இது நடந்தது 1992ல், 

2008-ஆருஷி தல்வார் என்ற பெண்ணும் ஹொமாராஜ் என்ற வேலைக்காரரும் கொல்லப்படுகிறார்கள், இன்று வரை அதுபற்றிய செய்தி பரபரப்பானதாகவே வருகிறது. 

77 களில் உபியில் 
(தற்போது வேறுமாநிலமாக பிரிந்துவிட்டது) 12 மலைவாசிப்பெண்கள் கூட்டாக கற்பழித்து கொலை செய்யட்டனர்,
சத்திய மங்கலம் காடுகளில் சந்தனவீரப்பனை பிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பல குடும்பங்களை விசாரனை என்ற பெயரில் சீரழித்தனர், அதைவைத்து வக்கிர பார்வையில் படமாக்குகிறார்கள், உள்ளூர் வழக்கு மொழியில் எழுதுகிறேன் என்று சில வார்த்தைகள் பயன்படுத்தி எழுதினார்கள் பெண்பித்தர்கள் விரும்பி படிக்க, 

ஹரியானாவில் பெண்மானபங்கப் படுத்தியதை தட்டிக்கேட்ட அவரது ஊனமுற்ற தந்தை சக்கர நாற்காலியோடு பெண்ணும் சேர்த்து எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.
வென்மணி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் (கடந்தமாதம்)

கைலர்ன்ஜி, வார்தா, ஜல்பாய்குடி, முஜாஃபராபாத், பிக்கானீர், ரோதக், அஜ்மீர், கத்தக், புவனேஷ்வர், என தேசம் முழுவதும் 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இன்றுவரை 
இந்த நிமிடம் வரை நீதிகிடைக்கவில்லை, இறந்து போனவர்களின் குடும்பத்தினரின் நிலை என்ன! 

இதோ சென்ற வாரம் ஹரியானா நடப்பு உதாரணம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சார்ந்த பெண் கற்பழிக்கப்படுகிறார், அவமானம் தாங்கமல் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார், சோனியா வருகிறார்களே என்ற ஒரே காரணத்தால் இருவரை கைது செய்தனர், 

அவ்வளவு தான் அதற்கு பிறகு என்ன நடந்தது அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது 

எதுவும் பத்திரிக்கை போடுவது கிடையாது ஏனென்றால் அவர் ஜாமீனில் வெளியே வந்து சுற்றிக்கொண்டு இருப்பார்கள், 

இவை யாவுமே ஜயோ பாவம் என்று ஒரு பெண்ணுக்காக ஆங்கில பத்திரிக்கையில் காலம் எழுதும் காலமிஸ்டுகளுக்கும், பிளாக்கில் பரிதாமாக எழுதும் பிளாக்கர்களுக்கும் தெரியாமல் இருப்பது ஏன்? ஒருவேளை அவர்கள் அவர்களுக்காக மட்டும் எழுதுவோம், என போனா பிடிக்கும் போதும் கணனி கற்க அமரும் போதும் பார்வேர்ட் செய்யும் போதும் சத்தியபிரமானம் எடுத்திருப்பார்களோ என்னவோ!
TPI-Mumbai 

டில்லியில் பெண்கற்பழித்து கொலை செய்யப்பட்ட இடம், நட்சத்திரவிடுதியின் மதுபானபகுதி, 
ஆருஷி ஹேமராஜ் வழக்கில் கொலை நடந்த இரவில் மாடியில் சிலர் மது அருந்தியதாக டிவிக்களில் மொகா புலனாய்வு திகில் சீரியல் மாதிரி ஓட்டினார்கள், 

இவ்வளவு நாகரீகமான காலத்திலும் சமுதாயத்தில் பணக்காரர்கள் மற்றும் மேட்டுக்குடி பெண்களுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே தாக்குதலாக தெரிகிறது, 

அன்றாடம் வாழ்க்கைபோராட்த்தில் தவிக்கும் ஏழைவர்க்கம், தலித்துகள், 
மலைவாசி பெண்கள் இவர்களின் பார்வையில் அஃறினையாக தெரிகிறார்கள் ஒருவேளை இந்த பெண்களும் மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள் என்று எழுதி இருந்தால் இன்ஸ்டென் நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைத்திருக்குமோ என்னவோ? 

No comments:

Post a Comment